Additional Services
home_Talent you can put faith in
Awards
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Additional Services

Additional Services

Additional Services

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

என்.ஆர். சுவாமி மறுவாழ்வு மற்றும் ஆரோக்கிய மையம்

தி.அ.க.யின் நிறுவனர்களில் ஒருவரான திரு. என்.ஆர். சுவாமியின் நூற்றாண்டு விழாவில் அவரது நினைவாக இந்த மையம் 2014-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருமலை மிஷன் மருத்துவமனையில் ஒரு தனி அம்சமாக செயல்படுகிறது. அதன் செயல்பாட்டிற்கு அனைத்து மருத்துவமனை சேவைகளின் ஆதரவையும் பெறுகிறது

அடிமையாதல்

23 ஆண்டுகளாக கிராமங்களில் வருடாந்திர குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கான முகாம்கள் நடத்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தி.அ.க. சுயமாக மறுவாழ்வு மையத்தைத் தொடங்க எண்ணியது. ஒரு மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்கள் குடிக்கு அடிமையானவர்களுக்கு 15 நாள் தங்கி சிகிச்சை பெறும் முறையில் சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சையானது போதைப்பொருளின் பல்வேறு அம்சங்களை அறிவுறுத்தும் வகையில் விரிவானது. சிகிச்சையின் போது வாழ்க்கைத் துணைவர்கள் தினசரி அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் அமர்வுகளில் கலந்துகொள்வது கட்டாயமாகும். சிகிச்சை பெற்ற நோயாளிகளின் நல்வாழ்வைக் கண்காணிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பின்தொடர்தல் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த மையம் புகையிலை மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தைக் கைவிடுவதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சையையும் வழங்குகிறது. கைத்தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் இது வழங்குகிறது.

வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சமூக ஆரோக்கியக் கல்வி
Counseling at the centre

இது இளம் பருவத்தினரின் நடத்தைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. மேலும் வழக்கமான கல்வி மற்றும் ஆலோசனைத் திட்டங்களுக்காக இப்பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து அப்பள்ளிகளுக்கு சென்று திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

 

போதை அடிமையாதல் மற்றும் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளுக்கு சென்னை, டி.டி.கே மருத்துவமனையின் பயிற்சி மற்றும் ஆதரவு ஆகியவற்றை இந்த மையம் பெரிதும் நம்புகிறது.

மனநலத்திற்கான ஆலோசனை

சில மிதமான மனநல பிரச்சினையுடன் அடையாளம் காணப்பட்ட மருத்துவமனையின் நோயாளிகளிடையே ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சையையும் வழங்குகிறது. இந்நடவடிக்கைக்காக சென்னையிலுள்ள ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது.

திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி அலகு

இது 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சமூக சுகாதார ஆய்வுகளை நடத்துவதற்கும், சமூகத்தில் பரவலாக காணப்படும் நோய்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி பெற்ற ஒரு தனி ஆராய்ச்சி அலகாகும். இது நிறுவன அறநெறிச் சபையின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றது. இது எலும்புத்தேய்மானம், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஆகியவற்றில் சில ஆய்வுகளை முடித்துள்ளது. இளம் குழந்தைகளிடையே செவித்திறன் குறைபாட்டைப் பரிசோதித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் குறித்த ஆய்வு ஒன்றையும் நடத்தி முடிந்துள்ளது.

இருதயவியல் (கார்டியாலஜி)
இதய நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையை செயல்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். டி.எம்.எச்-இல், ஓ.பி சேவைகளை வழங்குவதற்காக வருகை தரும் இருதயவியல் ஆலோசகர் எங்களிடம் இருக்கிறார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டி.எம்.எச் சுகாதார மையத்தில், தினசரி இருதய சிகிச்சை மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் இ.சி.ஜி, மின் ஒலி இதய வரைவு (எக்கோகார்டியோகிராம்), ஓடுபொறி (டிரெட்மில்) மற்றும் டாப்ளர் ஆகியவற்றுடன் தங்கள் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யலாம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட எங்கள் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி இதய பரிசோதனைக்குச் செல்கிறார்கள். சேர்க்கை மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகள் இதய பராமரிப்புக்கான எங்கள் ஒத்துழைப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.