Centre of Excellence
home_Talent you can put faith in
Quality healthcare_centerof excellence
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Quality Healthcare

Quality Healthcare

Quality Healthcare

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

Centres of Excellence

நீரிழிவு மையம்

டி.எம்.எச்-இல், நீரிழிவு நோயாளிகளை நாங்கள் முழுமையாகக் கவனித்துக் கொள்கிறோம்.

1. நீரிழிவு மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கால் பராமரிப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடற்சிகிச்சை நிபுணர்கள், உணவியல் வல்லுநர்கள், செவிலியர் கல்வியாளர்கள், செவிலியர் குழு உறுப்பினர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் எங்கள் அர்ப்பணிப்புக் குழு நோயாளிகள் தங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் சிக்கல்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவ ஒன்றிணைந்து செயல்படுகிறது.

2. நோயாளியின் உற்பத்தி வாழ்க்கையில் கவனம் செலுத்தப்படுகிறது, இது வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சாத்தியமாகும்.

3. நோயாளிகள் தங்கள் உயரத்திற்கு விரும்பத்தக்க மட்டத்தில் தங்கள் எடையை வைத்திருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்;

4. பொருத்தமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி முறையை பின்பற்றவும் மது, புகையிலை, மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை அகற்றவும்.

Diabetes Centre

 5. கற்பிக்கப்படும் கல்வியில் மற்றொரு முக்கியமான அம்சமாகக் கால்பாதுகாப்பு உள்ளது.

 6. நோயாளிகள் தினமும் தங்கள் பாதங்களைப் பரிசோதித்து புண்கள், கொப்புளம் மற்றும் தோல் வெடிப்புகள், கால் புண்கள் அல்லது மேலும் சிக்கல்களைத் தடுக்க உடனடியாக அவற்றைக் கவனிக்கவும் கற்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 இந்த மையம் நீரிழிவு பராமரிப்புக்கான வருடாந்திர தொகுப்புகளை வழங்குகிறது, இதில் மேலே உள்ள அனைத்து அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படுகின்றன.

டயாலிசிஸ் மையம்

எங்கள் மருத்துவமனையில், ஐந்து டயாலிசிஸ் அலகுகள் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்கின்றன. அவை நவீன அலகுகள் மற்றும் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. இந்த மையம் அவசரகால ஆலோசகரின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் பணிபுரியும் நன்கு தகுதியும் அனுபவமும் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டுள்ளது.

செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத எந்தவொரு நிகழ்வும் ஏற்பட்டால் உடனடி கவனிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மையம் அவசரத்துறைக்கு அருகில் உள்ளது. 

வருகை தரும் சிறுநீரக மருத்துவர் நோயாளிகளின் நிலைமைகளை அவ்வப்போது மதிப்பீடு செய்து பொருத்தமான ஆலோசனைகளை வழங்குகிறார். 

இந்த மையம் 2018-ஆம் ஆண்டில் ஒரு சமூக சேவை வசதியாக இரண்டு அலகுகளுடன் தொடங்கப்பட்டது.

வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 24/7 வேலை செய்யும் ஐந்து அலகுகளாக இது தொடர்ந்து விரிவடைந்துள்ளது. 

இருதயவியல் (கார்டியாலஜி)
இதய நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையை செயல்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். டி.எம்.எச்-இல், ஓ.பி சேவைகளை வழங்குவதற்காக வருகை தரும் இருதயவியல் ஆலோசகர் எங்களிடம் இருக்கிறார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டி.எம்.எச் சுகாதார மையத்தில், தினசரி இருதய சிகிச்சை மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் இ.சி.ஜி, மின் ஒலி இதய வரைவு (எக்கோகார்டியோகிராம்), ஓடுபொறி (டிரெட்மில்) மற்றும் டாப்ளர் ஆகியவற்றுடன் தங்கள் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யலாம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட எங்கள் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி இதய பரிசோதனைக்குச் செல்கிறார்கள். சேர்க்கை மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகள் இதய பராமரிப்புக்கான எங்கள் ஒத்துழைப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.