இதய நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையை செயல்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
டி.எம்.எச்-இல், ஓ.பி சேவைகளை வழங்குவதற்காக வருகை தரும் இருதயவியல் ஆலோசகர் எங்களிடம் இருக்கிறார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டி.எம்.எச் சுகாதார மையத்தில், தினசரி இருதய சிகிச்சை மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் இ.சி.ஜி, மின் ஒலி இதய வரைவு (எக்கோகார்டியோகிராம்), ஓடுபொறி (டிரெட்மில்) மற்றும் டாப்ளர் ஆகியவற்றுடன் தங்கள் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யலாம்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட எங்கள் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி இதய பரிசோதனைக்குச் செல்கிறார்கள்.
சேர்க்கை மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகள் இதய பராமரிப்புக்கான எங்கள் ஒத்துழைப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.