home_Talent you can put faith in
banner_Health-checkup
Thirumalai Mission
Thirumalai Mission
Thirumalai Mission
Hospital
Hospital
Hospital

Preventive Health Check-ups

Preventive Health Check-ups

Preventive Health Check-ups

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

The Health Care Destination That's Just Right For You !

உடல்நலப் பரிசோதனைகள்

"வரும் முன் காப்பதே சிறந்தது." தடுப்பு நடவடிக்கைகளில், அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் நமது வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை முதல் இடத்தில் உள்ளன. வேகமாக மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே இருக்கிறது.

தனிநபரின் தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான உடல்நலப் பரிசோதனைகளை நாங்கள் வழங்குகிறோம். தொழிற்சாலைகள் மற்றும் முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப தொகுப்புகளையும் நாங்கள் தனிப்பயனாக்குகிறோம்.

* விரைவு கூட்டு நோய் (கொமொர்பிடிட்டி) பரிசோதனை


விரைவு கூட்டு நோய் (கொமொர்பிடிட்டி) பரிசோதனை

கூட்டு நோய் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, உடல் பருமன் போன்றவை) கோவிட்-19 போன்ற பிற நோய்களின் தாக்கத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கின்றன. நீண்ட காலத்திற்குச் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டால் அவை சில நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கலாம்.

சோதனைகள்: இரத்த குளுக்கோஸ், ஹெச்.பி.ஏ.1.சி, ஹீமோகுளோபின், ஈ.சி.ஜி, சிறுநீர் வழக்கமான, எலக்ட்ரோலைட்டுகள், ஸ்பைரோமெட்ரி, பிபி, பிஎம்ஐ.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: ஒவ்வொரு ஆண்டும்.

முதன்மை சுகாதார சோதனை - தரநிலை


முதன்மை சுகாதார சோதனை - தரநிலை

நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், இந்த சோதனைகள் உங்கள் உடலில் அனைத்தும் நன்றாக உள்ளதா என்பதை மீண்டும் உறுதிப்படுத்தவும், நீங்கள் வயதாகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆரோக்கியத்தின் குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணவும் உதவும்.

சோதனைகள்: இரத்தக்கசிவு, உயிர்வேதியியல் பகுப்பாய்வு, கொழுப்பு சுயவிவரம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீர் / மலபரிசோதனைகள், எக்ஸ்-கதிர், ஈ.சி.ஜி, இரத்த வகைப்படுத்தல்

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: அனைத்து அளவுருக்களும் சாதாரணமாக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

முதன்மை சுகாதார சோதனை - நீரிழிவு


முதன்மை சுகாதார சோதனை - நீரிழிவு

நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், குடும்பத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால் (அல்லது) உங்கள் உடற் தகுதி அளவுகளில் சமீபத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், இந்த தொகுப்பு ஆரம்ப கட்டத்தில் உடல்நலப்பிரச்சினைகளைக் கண்டறியவும், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் சரியான நேரத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் உதவும்.

சோதனைகள்: நிலையான தொகுப்பு அனைத்து சோதனைகள் + அடிவயிறு அல்ட்ராசவுண்ட் + ஹெச்பிஏ1சி+ உணவு ஆலோசனை.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: நீரிழிவுக்கு முன்/நீரிழிவு நோய் இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை.

நிர்வாக சுகாதார சோதனை – தங்கம்


நிர்வாக சுகாதார சோதனை – தங்கம்

நீங்கள் குடும்பத்தின் முதன்மை சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்தால், உங்கள் ஓய்வில்லாத (பிஸியான) அட்டவணையின் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உங்களுக்கு ஒருபோதுமான நேரம் இல்லை என்றால், இது முழு உடல் சுகாதார பரிசோதனை செய்ய சரியான நேரம்.

சோதனைகள்: நிலையான எம்.எச்.சி பேக் + அடிவயிறு அல்ட்ராசவுண்ட் + ஹெச்.பி.ஏ.1.சி + வைட்டமின் டி + வைட்டமின் பி12 + எங்கள் மூத்த பொது மருத்துவருடன் ஆலோசனை.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

நிர்வாக சுகாதார சோதனை - வன்பொன்


நிர்வாக சுகாதார சோதனை - வன்பொன்

நீங்கள் ஒரு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் அல்லது மாதவிடாய் நின்ற வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால், நிர்வாக சுகாதாரப் பரிசோதனைக்குக் கூடுதலாக, இதய நோய்கள் மற்றும் எலும்புப்புரை போன்ற பிற வயது தொடர்பான நிலைமைகளுக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது.

சோதனைகள்: நிர்வாக சுகாதார சோதனை - தங்கம் + எதிரொலி கார்டியோகிராம் + முழு உடல் டெக்ஸா ஊடுகதிர் + உணவியல் நிபுணர் ஆலோசனை + ஒரு உடற் சிகிச்சை நிபுணர் உடற்தகுதி வழிகாட்டுதல்.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

* இளம் பருவத்தினரின் செயலில் உள்ள உடல்நலப் பரிசோதனை


இளம் பருவத்தினரின் செயலில் உள்ள உடல்நலப் பரிசோதனை

இளம் பருவத்தினர் விரைவான உடல், அறிவாற்றல் மற்றும் உளவியல் சமூக வளர்ச்சியை அனுபவிக்கிறார்கள், எனவே இது ஒரு நல்ல வாழ்க்கைக்கு சரியான அடித்தளத்தை அமைப்பதற்கான மிக முக்கியமான நேரம். உங்கள் வளர்ந்து வரும் குழந்தைக்கு ஒரு விரிவான பரிசோதனை செய்து, அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பரிசளிக்கவும்.

சோதனைகள்: ஹீமோகிராம், கல்லீரல் செயல்பாடு, கொழுப்பு சுயவிவரம், தைராய்டு செயல்பாடு, இரத்த குளுக்கோஸ், சிறுநீர் வழக்கமான, கிரியேட்டினைன்.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: 14 முதல் 21 வயது வரை ஒரு முறை.

* பெண்கள் ஆரோக்கிய சோதனை


பெண்கள் ஆரோக்கிய சோதனை

பெண்ணோயியல் பிரச்சினைகளின் குடும்ப வரலாறு உங்களிடம் இருந்தால், எந்தவொரு மகளிர் மருத்துவ அபாயங்களையும் ஆரம்பத்தில் கண்டறிந்து, சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கையை எடுக்கவும்.

சோதனைகள்: நிலையான எம்.எச்.சி பேக் + அடிவயிறு அல்ட்ராசவுண்ட்.

பரிந்துரைக்கப்படும் அதிர்வெண்: இமேஜிங் சோதனைகள் சாதாரணமாக இருந்தால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

* மூத்த குடிமக்களின் பாதுகாப்பான உடல்நலப் பரிசோதனை


மூத்த குடிமக்களின் பாதுகாப்பான உடல்நலப் பரிசோதனை

ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் சுயாதீனமாகவும் இருப்பது 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போற்றும் விஷயம். உங்கள் உடல்நலம் மற்றும் வயதை அழகாக பாதுகாக்க ஒரு முழுமையான சோதனை செய்யுங்கள்.

சோதனைகள்: நிலையான எம்.எச்.சி பேக் + இரத்த குளுக்கோஸ் சோதனைகள் + அடிவயிறு அல்ட்ராசவுண்ட் + முழு உடல் டெக்ஸா ஊடுகதிர். பெண்களுக்கான பி.எ.பி ஸ்மியர். எங்கள் மூத்த பொது மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை.

அதிர்வெண்: ஒவ்வொரு ஆண்டும் 60 வயதிற்குப் பிறகு.

* உடல் பருமன் மேலாண்மை சோதனை


உடல் பருமன் மேலாண்மை சோதனை

நீங்கள் உணராமல் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதா? உங்கள் உடல் நிறை குறியீட்டெண் 25-க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும், ஆரோக்கியமான உணவை உண்ணவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். இருப்பினும், உங்கள் உடலியல் செயல்பாடுகள் இயல்பானதா என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

சோதனைகள்: முழுமையான இரத்த எண்ணிக்கை, வழக்கமான சிறுநீர்ப் போக்கு, தைராய்டு செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு, இரத்த குளுக்கோஸ், கொழுப்பு சுயவிவரம்.

அதிர்வெண்: உங்கள் பி.எம்.ஐ 25 க்கு மேல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும்.

* தைராய்டு செயல்பாடு சோதனை


தைராய்டு செயல்பாடு சோதனை

தைராய்டு ஹார்மோன்கள் மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் வேலை செய்ய உதவுகின்றன. நீங்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் எடை அதிகரிக்கிறீர்கள் அல்லது மனச்சோர்வை உணர்கிறீர்கள் என்றால், பிரச்சினை உங்கள் தைராய்டு சுரப்பியுடன் இருக்கலாம். இன்று சோதித்துக்கொள்ளவும்.

சோதனைகள்: ஹீமோகுளோபின், கிரியேட்டினைன், இரத்த குளுக்கோஸ், கொழுப்பு சுயவிவரம், டி.எஸ்.ஹெச், எஃப்.டி.4, எ.டி.பி.ஓ

தொழில்துறைகளுக்கு அவற்றின் வருங்கால ஊழியர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சில ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு உடல்நலப் பரிசோதனை தொகுப்புகள் தேவைப்படுகின்றன. தொழில்கள் மற்றும் தொழில் வழங்குனர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை வழங்குகின்றோம்.

இருதயவியல் (கார்டியாலஜி)
இதய நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சையை செயல்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். டி.எம்.எச்-இல், ஓ.பி சேவைகளை வழங்குவதற்காக வருகை தரும் இருதயவியல் ஆலோசகர் எங்களிடம் இருக்கிறார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டி.எம்.எச் சுகாதார மையத்தில், தினசரி இருதய சிகிச்சை மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் இ.சி.ஜி, மின் ஒலி இதய வரைவு (எக்கோகார்டியோகிராம்), ஓடுபொறி (டிரெட்மில்) மற்றும் டாப்ளர் ஆகியவற்றுடன் தங்கள் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யலாம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட எங்கள் நோயாளிகள், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி இதய பரிசோதனைக்குச் செல்கிறார்கள். சேர்க்கை மற்றும் கூடுதல் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகள் இதய பராமரிப்புக்கான எங்கள் ஒத்துழைப்பு மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.