எங்கள் சிகிச்சை முறை
TMH-இல் அக்கறையுடன் உயர்தர சிகிச்சை.
ஒவ்வொரு மருத்துவ ஆலோசனையும் எப்படி நடக்கிறது என்று பாருங்கள்சிகிச்சைச் சரிபார்ப்புப் பட்டியல்
- முழுமையான முதல் மதிப்பீடு
- நீங்களும் பார்க்கக்கூடிய பதிவுகள்
- தேவையற்ற பரிசோதனைகள் இல்லை
- நம்பகமான லேப் முடிவுகள்
- தணிக்கை செய்யப்படும் சிகிச்சை முறைகள்
- சிரமமில்லாத, துணையுடன் கூடிய பரிந்துரைகள்
- ஒரு நேர்மையான மருந்தகம்
- வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் (SOP)
- தொடர்ந்து மேம்பாடு
- தொடர் பயிற்சிக்கு முக்கியத்துவம்
- ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்
- உங்கள் குரலைக் கேட்கிறோம்
TMH-இல் தரமான சிகிச்சை
ஒவ்வொரு மருத்துவ ஆலோசனையும் ஒழுங்கான, வெளிப்படையான முறையில் நடக்கிறது
-
முழுமையான முதல் மதிப்பீடு
மருத்துவரைப் பார்க்கும் முன், நோயாளியின் BP, நாடித் துடிப்பு போன்ற அடிப்படை அளவீடுகள் பரிசோதித்துப் பதிவு செய்யப்படுகின்றன. முழு விவரங்களையும் முந்தைய பதிவுகளையும் கேட்டறிந்து நோயாளியை முழுமையாகப் பரிசோதித்து, தேவையான பரிசோதனைகளை மட்டுமே பரிந்துரைக்கிறோம்.
-
நீங்களும் பார்க்கக்கூடிய பதிவுகள்
எல்லாப் பதிவுகளும் மின்னணு மருத்துவப் பதிவுகளாக (EMR) மைய சர்வரில் சேமிக்கப்படுகின்றன; எந்த மருத்துவரும் அவற்றைப் பார்க்க முடியும். அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டு நோயாளிகளிடமும் கொடுக்கப்படுகின்றன — ஒவ்வொரு நோயாளிக்கும் தன் உடல்நலத் தகவல்களைப் பெறும் உரிமை உண்டு என்பது எங்கள் நம்பிக்கை.
-
தேவையற்ற பரிசோதனைகள் இல்லை
தேவையில்லாத சிகிச்சைகளுக்கோ பரிசோதனைகளுக்கோ மக்கள் பணம் செலவழிக்கக் கூடாது என்பதால், பரிசோதனைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறோம்.
-
நம்பகமான லேப் முடிவுகள்
எங்கள் லேப் உயர்தர முறைகளைப் பயன்படுத்துகிறது; வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (CMC) வெளித் தரச் சரிபார்ப்புத் திட்டத்தில் இணைந்துள்ளது — எங்கள் முடிவுகள் துல்லியமானவையா என்று மாதந்தோறும் சரிபார்க்கப்படுகின்றன.
-
தணிக்கை செய்யப்படும் சிகிச்சை முறைகள்
சிகிச்சை முறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை ஒரு சரிபார்ப்புப் பட்டியல் உறுதிசெய்கிறது; எல்லா மருத்துவர்களும் ஒரே தரத்தில் சிகிச்சை அளிக்கிறார்களா என்று தணிக்கைகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது.
-
சிரமமில்லாத, துணையுடன் கூடிய பரிந்துரைகள்
வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியிருந்தால், உடனே பரிந்துரைக் கடிதம், தொலைபேசி அழைப்பு, முழு மருத்துவ அறிக்கையுடன் அனுப்புகிறோம் — நோயாளியின் நிலை ஆபத்தாக இருந்தால் எங்கள் ஆம்புலன்ஸும் உடன் செல்கிறது.
-
ஒரு நேர்மையான மருந்தகம்
எங்கள் மருந்தகத்தில் தரமான மருந்துகள் உள்ளன; தேவைக்கு மேல் மருந்துகளை எழுதுவதில்லை.
-
வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் (SOP)
நோயாளி பராமரிப்பு, நிர்வாகம் என ஒவ்வொரு பணியும் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின்படி (SOP) நடக்கிறது; புதிதாகச் சேரும் ஒவ்வொருவருக்கும் அவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
-
தொடர்ந்து மேம்பாடு
பல துறையினர் கொண்ட உள் நிர்வாகக் குழு, ஒவ்வொரு குழுவின் முக்கியச் செயல்திறன் அளவீடுகளையும் பரிசீலித்து, தேவையான மாற்றங்களைச் செய்கிறது.
-
தொடர் பயிற்சிக்கு முக்கியத்துவம்
பணியாளர்கள் வெளியே நடக்கும் பயிற்சிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்; உள்ளேயும் வழக்கமான பயிற்சிகள் நடக்கின்றன — தரத்தை உயர்த்தவும் உறுதிசெய்யவும் பயிற்சியே அடிப்படை என்பது எங்கள் நம்பிக்கை.
-
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்
TMH-இல் நடக்கும் கற்றல் அமர்வுகளில் மருத்துவர்களும் பணியாளர்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறார்கள்.
-
உங்கள் குரலைக் கேட்கிறோம்
யாரும் மருத்துவரைப் பார்க்கத் தவறாமலும், தேவையின்றிக் காத்திருக்காமலும் இருக்க, எங்கள் நோயாளி உதவிப் பணியாளர்கள் காத்திருப்புப் பகுதிகளில் சுற்றி வந்து கவனிக்கிறார்கள்; OP நோயாளிகளிடமும், டிஸ்சார்ஜ் ஆன பின்பும் கருத்துகளைக் கேட்டுப் பெறுகிறோம்.