முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

நோயாளிகள் உரிமைச் சாசனம்

நோயாளிகளின் உரிமைகளும் பொறுப்புகளும்

ஒவ்வொரு நோயாளியும் TMH-இடம் என்ன எதிர்பார்க்கலாம், பதிலுக்கு நோயாளிகளிடமும் குடும்பத்தினரிடமும் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்.

நோயாளிகளின் உரிமைகள்

TMH-இல் ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள உரிமைகள்:

  1. பரிசோதனை, சிகிச்சை முறைகள், சிகிச்சையின்போது மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவது; தனிப்பட்ட நம்பிக்கைகளும் அந்தரங்கமும் மதிக்கப்படுவது
  2. உடல்ரீதியாகத் துன்புறுத்தப்படாமலும் புறக்கணிக்கப்படாமலும் காக்கப்படுவது
  3. சிகிச்சையை நிராகரிப்பது
  4. சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு எல்லாப் பதிவேடுகளும் தகவல் பரிமாற்றங்களும் ரகசியமாகக் காக்கப்படுவது
  5. தன் சிகிச்சை குறித்த முடிவுகளில் பங்குகொள்வது, விவரம் அறிந்து ஒப்புதல் அளிப்பது
  6. சிகிச்சைக்கான உத்தேச செலவை அறிவது
  7. மருத்துவ அறிக்கை / டிஸ்சார்ஜ் சம்மரி வடிவில் தன் மருத்துவப் பதிவேட்டின் தகவல்களைப் பெறுவது
  8. மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள குறைதீர்க்கும் மையத்தில் தங்கள் குறைகளை, கரிசனைகளை அறிவிப்பது
  9. நோயாளி தன் சிகிச்சையில் முழுமையாகப் பங்குகொள்ள இயலாத நிலையில், உடன் இருக்கும் உரிய உறவினருக்கு இவ்வுரிமைகள் அனைத்தும் பொருந்தும்

நோயாளிகளின் பொறுப்புகள்

பதிலுக்கு, ஒவ்வொரு நோயாளியும் குடும்பத்தினரும் செய்ய வேண்டியவை:

  1. தனது உடல்நிலை பற்றிய முழுமையான, துல்லியமான விவரங்களை அளிக்க வேண்டும்
  2. மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைத் திட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும்
  3. சிகிச்சையை நிராகரித்தால் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்
  4. தங்கள் நோய் குறித்த எல்லாப் பதிவுகளையும் பாதுகாத்து, கேட்கும்போது அளிக்க வேண்டும்
  5. தங்கள் விலையுயர்ந்த பொருட்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்
  6. “புகையிலை இல்லா வளாகம்” உட்பட மருத்துவமனையின் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்
  7. சத்தம், சுத்தம், பார்வையாளர் எண்ணிக்கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒத்துழைத்து, சக நோயாளிகள் மற்றும் TMH ஊழியர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்
  8. மற்றவர்களுடைய உடைமைகளையும் TMH-இன் உடைமைகளையும் மதிக்க வேண்டும்
  9. தங்களால் எவ்வளவு கட்டணம் செலுத்த முடியும் என்பதை உண்மையாகத் தெரிவித்து, ஒப்புக்கொண்ட கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்
  10. சேவைகள், நடைமுறைகள் குறித்துப் பயனுள்ள கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்
  11. எல்லா மருத்துவப் பணியாளர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்
  12. பொருந்தும் தேசிய, மாநில, உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

குறை அல்லது புகார் தெரிவிக்க

உங்கள் சிகிச்சை அல்லது எங்கள் சேவைகள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால், இந்த முகவரிக்கு எழுதுங்கள்:

[email protected]
  • Mr. Prasanta Kumar Pal
  • நிர்வாக மேலாளர்

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சாசனம்

அதே சாசனம், ஆங்கிலத்திலும் தமிழிலும், அச்சிடக்கூடிய PDF-ஆக.

PDF பதிவிறக்க · 0.4 MB
  • நோயாளிகளின் உரிமைகள்
  • நோயாளிகளின் பொறுப்புகள்
  • குறை அல்லது புகார் தெரிவிக்க
இப்போதே அழையுங்கள்