முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) at Thirumalai Mission Hospital

தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) பற்றி

கடுமையான நோய், பெரிய அறுவை சிகிச்சை அல்லது உயிருக்கு ஆபத்தான நிலை காரணமாகத் தொடர் கண்காணிப்பும் உயிர்காக்கும் சிகிச்சையும் தேவைப்படும் நோயாளிகளுக்கு, எங்கள் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை ICU சிறப்புச் சிகிச்சை அளிக்கிறது.

ICU-வில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கின்றனர்; அனைவரும் இணைந்து அறிவியல் அடிப்படையிலான, அன்பான சிகிச்சையை வழங்குகிறார்கள்.

தொடர் கண்காணிப்பு, உடனடிச் சிகிச்சை, பல துறைகளின் ஒருங்கிணைந்த கவனிப்பு — இவை நோயாளிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. எங்களிடம் இல்லாத சிறப்புச் சிகிச்சை தேவைப்பட்டால், நோயாளியின் நிலையை உடனே சீராக்கி, பெரிய மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறோம்.

எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்

  • மருத்துவ தீவிர சிகிச்சை
  • அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை
  • இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல்
  • வென்டிலேட்டர் மற்றும் சுவாச உதவி
  • அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தீவிர சிகிச்சை
  • செப்சிஸ் (இரத்தத்தில் பரவிய தொற்று) மற்றும் கடுமையான தொற்றுகளுக்குச் சிகிச்சை
  • இதயக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை
  • நரம்பு மண்டல நோய்களுக்கான தீவிர சிகிச்சை
  • தேவைப்படும்போது, வாழ்வின் இறுதிக் கட்டத்தில் வலி, துன்பம் குறைக்கும் ஆறுதல் சிகிச்சை (palliative care)

ICU சிகிச்சை தேவைப்படும் நிலைகள்

இந்தக் காரணங்களுக்காக ICU-வில் அனுமதி தேவைப்படலாம்:

  • கடுமையான தொற்றுகள், செப்டிக் ஷாக்
  • மாரடைப்பு (NSTEMI, நிலையற்ற ஆஞ்சைனா), பிற இதய அவசர நிலைகள்
  • வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் சுவாசச் செயலிழப்பு
  • பக்கவாதம் (உடனடிச் சிகிச்சைக்கான முதல் சில மணி நேரம் கடந்த பின்), பிற நரம்பு மண்டல அவசர நிலைகள்
  • பெரிய விபத்துக் காயங்கள், பல இடங்களில் காயங்கள்
  • ஆபத்து அதிகமுள்ள அறுவை சிகிச்சைக்குப் பின் கண்காணிப்பு
  • திடீர் சிறுநீரக பாதிப்பு, பல உறுப்புகள் செயலிழத்தல்
  • கடுமையான சர்க்கரை நோய் அவசர நிலைகள்
  • விஷம், விஷக்கடி
  • உயிருக்கு ஆபத்தான பிற மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை நிலைகள்

வசதிகளும் கருவிகளும்

  • நவீன மல்டிபாராமீட்டர் மற்றும் EtCO2 கண்காணிப்பு
  • வென்டிலேட்டர்கள்
  • இன்ஃப்யூஷன், சிரிஞ்ச் பம்புகள்
  • மைய ஆக்சிஜன் மற்றும் சக்ஷன் வசதி
  • டீஃபிபிரிலேட்டர்
  • படுக்கை அருகே ECG கண்காணிப்பு
  • அவசர உயிர்காக்கும் கருவிகள்
  • தனிமைப்படுத்தும் அறைகள் (தேவைப்படும்போது)
  • 24×7 லேப், ஸ்கேன் வசதி
  • பல துறை சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) 24 மணி நேரம் +91 88840-44444 என்ற எண்ணை அழையுங்கள்

தீவிர சிகிச்சை, 24 மணி நேரமும்

அவசர சிகிச்சைப் பிரிவு வழியாகவோ, எங்கள் சிறப்பு மருத்துவர்களின் பரிந்துரைப்படியோ நோயாளிகள் ICU-வில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவசரம் என்றால் நேராக வாருங்கள், அல்லது முன்பே அழைத்துச் சொன்னால் எங்கள் குழு தயாராக இருக்கும்.

பிற சிறப்புப் பிரிவுகள்

அனைத்தையும் பாருங்கள்
இப்போதே அழையுங்கள்