முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 24 செப்டம்பர் 2026

தனியுரிமைக் கொள்கை

இந்த இணையதளம் மூலம் நீங்கள் எங்களுடன் பகிரும் விவரங்களை நாங்கள் கையாளும் விதம்.

திருமலை மிஷன் மருத்துவமனை (TMH) என்பது திருமலை அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். இந்த இணையதளம் என்னென்ன தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறது, ஏன் சேகரிக்கிறது, அவற்றை யார் பார்க்கலாம், மற்றும் உங்களுக்கு உள்ள தெரிவுகள் என்னென்ன என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. இது இந்த இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும். மருத்துவமனையில் உள்ள உங்கள் மருத்துவப் பதிவுகள், மருத்துவமனையின் சொந்த மருத்துவப் பதிவேடு பராமரிப்பு நடைமுறைகளின் கீழ் தனியாகக் கையாளப்படுகின்றன.

நாங்கள் சேகரிப்பவை

இந்தத் தளத்தில் உள்ள படிவம் மூலம் நீங்கள் முன்பதிவுக் கோரிக்கை அல்லது விசாரணையை அனுப்பும்போது, நாங்கள் சேகரிப்பவை:

  • உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்;
  • நீங்கள் வழங்க விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் முகவரி;
  • நீங்கள் தேர்ந்தெடுத்த துறை, மருத்துவர் அல்லது உடல் பரிசோதனைத் திட்டம் (இருந்தால்), நீங்கள் விரும்பும் தேதி; மற்றும்
  • செய்திப் பெட்டியில் நீங்கள் எழுதும் எதுவும்.

உங்கள் வருகையை ஏற்பாடு செய்வதற்குத் தேவையானவற்றை மட்டும் பகிரவும். செய்தியில் விரிவான மருத்துவ வரலாற்றைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை; உங்கள் மருத்துவர் அதை உங்களுடன் நேரில் விவாதிப்பார்.

எங்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வழங்காமல் நீங்கள் தளத்தை உலாவலாம். நாங்கள் விளம்பரங்களையோ அல்லது பார்வையாளர்களைக் கண்காணிக்கும் கருவிகளையோ பயன்படுத்துவதில்லை, மேலும் இந்தத் தளம் சரியாகச் செயல்படுவதற்குத் தேவையான குக்கீகளை மட்டுமே பயன்படுத்துகிறது.

நீங்கள் முன்பதிவுப் படிவத்தை நிரப்பத் தொடங்கும்போது, தானியங்கி ஸ்பேமைத் தடுக்க, நம்பகமான ஒரு சேவை நிறுவனம் உங்கள் பிரவுசர், இணைய இணைப்பு ஆகியவற்றின் தொழில்நுட்ப விவரங்களைச் சரிபார்க்கிறது. இது அந்தச் சரிபார்ப்புக்கு மட்டுமே; உங்களைக் கண்காணிக்க அல்ல.

அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

  • உங்கள் முன்பதிவை உறுதிசெய்ய, ஏற்பாடு செய்ய அல்லது வேறு தேதிக்கு மாற்ற உங்களைத் தொடர்புகொள்ளவும், உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
  • நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால்: உங்கள் கோரிக்கையின் நகலை அனுப்ப; அது உறுதியானதா, ரத்தானதா என்று தெரிவிக்க; அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிக்கு முன் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் அதைத் தெரிவிக்க.
  • பெறப்பட்ட கோரிக்கைகளைப் பதிவுசெய்து வைக்க; அதன் மூலம் எங்கள் பணியாளர்கள் தொடர்ந்து கவனிக்க முடியும்.

உங்கள் தகவல்களை நாங்கள் விற்பதில்லை; விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதோ, வேறு யாருடைய சொந்தத் தேவைக்கும் பகிர்வதோ இல்லை.

அதை யார் பார்க்க முடியும்

உங்கள் கோரிக்கையை, முன்பதிவுகளையும் விசாரணைகளையும் கவனிக்கும் மருத்துவமனைப் பணியாளர்களும், எங்கள் சார்பில் மட்டுமே இந்த இணையதளத்தை இயக்க உதவும் நம்பகமான சேவை நிறுவனங்களும் மட்டுமே பார்க்க முடியும். சட்டப்படி தேவைப்படும்போது தகவல்களை வெளியிட வேண்டியிருக்கலாம்.

சில பக்கங்களில் வரைபடம், வீடியோ போன்ற பிற சேவைகளின் உள்ளடக்கம் காட்டப்படுகிறது; நன்கொடைகள் தனி ஒரு கட்டணச் சேவை நிறுவனம் மூலம் செலுத்தப்படுகின்றன. இந்தச் சேவைகளுக்கு அவற்றுக்கென்று தனியுரிமைக் கொள்கைகள் உள்ளன.

எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம்

உங்கள் வருகையை ஏற்பாடு செய்யவும், மருத்துவமனையின் வழக்கமான பதிவுகளுக்கும் தேவைப்படும் வரை மட்டுமே முன்பதிவுக் கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். கீழே உள்ள தொடர்பு விவரங்கள் மூலம், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கோரிக்கையை நீக்கச் சொல்லலாம்.

அதை எவ்வாறு பாதுகாக்கிறோம்

உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறோம், மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமே அவற்றை அணுக முடியும்.

உங்கள் விருப்பங்களும் உரிமைகளும்

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023-க்கு இணங்க, நீங்கள் எங்களிடம் பின்வருவனவற்றைக் கோரலாம்:

  • இந்த இணையதளம் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தகவல்களைத் தெரிவிக்க;
  • தவறான அல்லது முழுமையற்ற தகவல்களைத் திருத்த; மற்றும்
  • உங்கள் தகவல்களை நீக்க.

உங்கள் தகவல்களை நாங்கள் கையாண்ட விதம் குறித்து உங்களுக்குக் குறை இருந்தாலும் தெரிவிக்கலாம். ஒரு குழந்தைக்காகவோ வேறொருவருக்காகவோ நீங்கள் கோரிக்கை வைத்தால், அதை எங்களிடம் சொல்லுங்கள்; உதவுகிறோம்.

உங்கள் தகவல்கள் குறித்து எங்களைத் தொடர்புகொள்ள

தனியுரிமை தொடர்பான எந்தக் கேள்வி, கோரிக்கை அல்லது புகாருக்கும் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அல்லது +91 88840-44444 என்ற எண்ணை அழையுங்கள். இந்த முகவரிக்கும் கடிதம் எழுதலாம்: திருமலை நகர், வானாபாடி ரோடு,
ராணிப்பேட்டை – 632 404,
தமிழ்நாடு, இந்தியா.

[email protected]

இந்தக் கொள்கையில் மாற்றங்கள்

உங்கள் தகவல்களை நாங்கள் கையாளும் விதத்தில் மாற்றம் செய்தால், இந்தப் பக்கத்தையும் மேலே உள்ள தேதியையும் புதுப்பிப்போம்.

இப்போதே அழையுங்கள்