0124 / 7
அவசர மற்றும் விபத்து சிகிச்சை
மருத்துவ அவசரம் எந்த நேரத்திலும் வரலாம்; உரிய நேரத்தில் கிடைக்கும் சிகிச்சை மிக முக்கியம். எங்கள் 24×7 அவசர சிகிச்சைப் பிரிவில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள், மகப்பேறு, விபத்து என எல்லா வகை அவசர நிலைகளுக்கும் விரைவாகப் பரிசோதித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.
அவசர சேவைகள்
- 0124×7 விபத்து மற்றும் அவசர சிகிச்சை
- 02ஆம்புலன்ஸ்
- 03ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உடனடி சிகிச்சை அளித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருதல்
- 04பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை
- 05விபத்து மற்றும் காயங்களுக்கான சிகிச்சை
- 06அவசர மகப்பேறு மற்றும் மகளிர் நல சிகிச்சை
- 07விஷம் அருந்துதல், பாம்புக்கடி, விஷக்கடிகளுக்கான சிகிச்சை
- 08அவசர சிகிச்சை முறைகளும் உயிர்காக்கும் முதலுதவியும்
02மேம்பட்ட தீவிர சிகிச்சை
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)
கடுமையான நோய், பெரிய அறுவை சிகிச்சை அல்லது உயிருக்கு ஆபத்தான நிலை காரணமாகத் தொடர் கண்காணிப்பும் உயிர்காக்கும் சிகிச்சையும் தேவைப்படும் நோயாளிகளுக்கு, எங்கள் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை ICU சிறப்புச் சிகிச்சை அளிக்கிறது.
ICU-வில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கின்றனர். எங்களிடம் இல்லாத சிறப்புச் சிகிச்சை தேவைப்பட்டால், நோயாளியின் நிலையை உடனே சீராக்கி, பெரிய மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறோம்.
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)- மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை
- இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல்
- வென்டிலேட்டர் மற்றும் சுவாச உதவி
- அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தீவிர சிகிச்சை
- செப்சிஸ் (இரத்தத்தில் பரவிய தொற்று) மற்றும் கடுமையான தொற்றுகளுக்குச் சிகிச்சை
- இதயக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை
032012 முதல்
தொற்றா நோய்கள் (NCD) மையம்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவை. சர்க்கரை நோய் உடலின் பல முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் சிக்கலான நோய்; வாழ்நாள் முழுவதும் மருந்தும் கண்காணிப்பும் தேவை. 2012 முதல் இந்த நோய்க்கான சிகிச்சையில் நாங்கள் சிறப்பு அனுபவம் பெற்றுள்ளோம். நோயாளிகள் நலமாகவும் உழைத்தும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதே எங்கள் நோக்கம் — நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பாதிப்புகளைத் தடுப்பதிலும் நோயாளிகளுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
சர்க்கரை நோய் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், பாத அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், உணவியல் நிபுணர்கள், நோயாளிகளுக்குக் கற்றுத்தரும் செவிலியர்கள், டெக்னீஷியன்கள், கவுன்சிலர்கள் அடங்கிய குழு, நோயாளிகள் தங்கள் சர்க்கரை நோயையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க இணைந்து உதவுகிறது. பாதப் பராமரிப்புக் கல்வி — தினமும் பாதங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வது, சரியான காலணி அணிவது — இதில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மையம் சர்க்கரை நோய்ச் சிகிச்சைத் திட்டங்களை வழங்குகிறது — 90 நாள் விழிப்புணர்வுத் திட்டம், ஓராண்டுத் திட்டம் — இவை ஒவ்வொரு அம்சத்தையும் முறையாகக் கவனிக்கின்றன.
கட்டுப்பாடு ஏன் முக்கியம் — நாங்கள் தடுக்க உதவும் பாதிப்புகள்:
- 1மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு
- 2பக்கவாதம் / முடக்கம்
- 3கேங்க்ரீன் (அழுகல்) மற்றும் கை, கால் இழப்பு
- 4பார்வை இழப்பு (விழித்திரை, கண்புரை)
- 5சிறுநீரக செயலிழப்பு / டயாலிசிஸ்
- 6நரம்பு பாதிப்பு மற்றும் பாதப் புண்கள்
042018 முதல் · 24/7
டயாலிசிஸ் மையம்
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் வெளியேற்ற முடியாத நிலையில், டயாலிசிஸ் அந்த வேலையைச் செய்கிறது; நீண்டகால சிறுநீரக நோயாளிகளுக்கு இதுவே சிகிச்சை. சர்க்கரை நோயின் பாதிப்பாகச் சிறுநீரகம் செயலிழப்பது அதிகம்; வேறு காரணங்களும் உண்டு.
2018-ல் சமூக சேவையாக இரண்டு இயந்திரங்களுடன் தொடங்கிய இந்த மையம், அதிகரிக்கும் தேவைக்கேற்ப தொடர்ந்து வளர்ந்து, இப்போது 24 மணி நேரமும் இயங்கும் 15 நவீன இயந்திரங்களைக் கொண்டுள்ளது. வருகை தரும் சிறுநீரக நிபுணரின் (நெஃப்ராலஜிஸ்ட்) மேற்பார்வையில், நன்கு தகுதியும் அனுபவமும் உள்ள டெக்னீஷியன்களும் செவிலியர்களும் இங்கு பணியாற்றுகின்றனர்.
15டயாலிசிஸ் இயந்திரங்கள்
24/724 மணி நேரமும்
2018சேவை தொடங்கிய ஆண்டு
ஹெபடைடிஸ் B தொற்று உள்ள நோயாளிகளுக்கென்றே தனியாக ஒரு இயந்திரம் உள்ளது; இதனால் தொற்றுக் கட்டுப்பாடும் மேலும் உறுதியாகிறது.