பல் மருத்துவம் பற்றி
எங்கள் பல் மருத்துவத் துறை முழு உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு, கடுமையான நோய்கள் வராமல் தடுக்க முயல்கிறது. அனுபவம் வாய்ந்த எங்கள் பல் மருத்துவர்கள் வாய், பல் நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, தடுக்கின்றனர்: பல் சுத்தம், பரிசோதனை, கேப் (கிரவுன்), பிரிட்ஜ், பல் செட், அவசர சிகிச்சை, பல் எடுத்தல், பல் அடைப்பு, இம்ப்ளான்ட் பொருத்துதல், ஈறு சிகிச்சை, வேர் சிகிச்சை (ரூட் கேனால்) — தலை, கழுத்துப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை பெறும் முன் செய்ய வேண்டிய பல் பரிசோதனையும் இதில் அடங்கும்.
எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்
- பல் சுத்தம், பரிசோதனை
- கேப் (கிரவுன்), பிரிட்ஜ்
- பல் செட், பல் எடுத்தல்
- அவசர பல் சிகிச்சை
- பல் அடைப்பு, இம்ப்ளான்ட் மேல் பல் பொருத்துதல்
- ஈறு சிகிச்சை
- வேர் சிகிச்சை (ரூட் கேனால்)
- தலை, கழுத்துக் கதிர்வீச்சு சிகிச்சைக்கு முன் பல் பரிசோதனை
- சிக்கிய ஞானப்பல் அறுவை சிகிச்சை
- வாயில் உள்ள கட்டிகளுக்கு (ஃபைப்ரோமா) பயாப்ஸி, அகற்றுதல்
- பல் இம்ப்ளான்ட்
- தலை, முகத் தாடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள்
- கோணலான பற்கள், இடைவெளிகளைச் சரிசெய்யும் கிளிப் (பிரேஸஸ்)
வசதிகளும் கருவிகளும்
- பல் சிகிச்சை விளக்கு
- மருத்துவர் மற்றும் உதவியாளர் இருக்கைகள்
- கருவித் தட்டு / பக்கத் தட்டு
- வாய்க் கண்ணாடி (Mouth mirror)
- டென்டல் எக்ஸ்ப்ளோரர் / ப்ரோப்
- காலேஜ் ஃபோர்செப்ஸ் / ட்வீசர்
- ஈறு அளவீட்டுக் கருவி (Periodontal probe)
- பல் அடைப்புக் கருவிகள்
- க்யூரிங் லைட் (பல் அடைப்பை இறுக்கும் விளக்கு)
- அபெக்ஸ் லொகேட்டர்
- எண்டோமோட்டார்
- மைக்ரோமோட்டார்
- ஏரோட்டர்
- டிஜிட்டல் பல் எக்ஸ்-ரே கருவி
- அல்ட்ராசோனிக் ஸ்கேலர் (பல் காரை நீக்கும் கருவி)
- UV கிருமிநீக்கப் பெட்டி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சூடான அல்லது குளிர்ந்த உணவு சாப்பிடும்போது என் பல் ஏன் கூசுகிறது?
பல்லின் மேல் பூச்சு (எனாமல்) தேய்தல், பல் சொத்தை, ஈறு கீழிறங்குதல், பல்லில் விரிசல், பல்லின் வேர் வெளியே தெரிதல் போன்றவற்றால் பல் கூச்சம் வரலாம்.
பல் துலக்கும்போது என் ஈறுகளில் ஏன் இரத்தம் வருகிறது?
ஈறு அழற்சி, ஈறு தொற்று, வாயைச் சரியாகச் சுத்தம் செய்யாதது, பல்லில் காரை (plaque) படிதல் அல்லது ஈறு நோய் காரணமாக ஈறுகளில் ரத்தம் வரலாம்.
என் ஈறுகளிலோ முகத்திலோ ஏன் வீக்கம் ஏற்படுகிறது?
பல் தொற்று, ஈறு சீழ் கட்டி, உள்ளே புதைந்த பல், ஞானப்பல் தொற்று அல்லது பிற பல் பிரச்சனைகள் காரணமாக வீக்கம் ஏற்படலாம்.
பல் மருத்துவரிடம் முன்பதிவு செய்யுங்கள்
பல் சுத்தம், பல் அடைப்பு முதல் கேப் (கிரவுன்), வேர் சிகிச்சை (ரூட் கேனால்), அவசர பல் சிகிச்சை வரை — உங்கள் புன்னகையை ஆரோக்கியமாக வைத்திருக்க எங்கள் பல் மருத்துவக் குழு உதவுகிறது.
பிற சிறப்புப் பிரிவுகள்
அனைத்தையும் பாருங்கள்- அவசர மற்றும் விபத்து சிகிச்சை

- தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)

- பொது மருத்துவம்

- பொது அறுவை சிகிச்சை

- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்

- குழந்தை மருத்துவம்

- குழந்தை அறுவை சிகிச்சை

- எலும்பியல்

- இருதயவியல் (கார்டியாலஜி)

- சிறுநீரகவியல்

- சிறுநீரகப் பாதை மருத்துவம் (யூராலஜி)

- தோல் மருத்துவம்

- காது, மூக்கு, தொண்டை (ENT)

- கண் மருத்துவம்

- மயக்கவியல்

- பிசியோதெரபி

- கதிரியக்கவியல்
