மயக்கவியல் பற்றி
மருத்துவமனையில் நடக்கும் எல்லா அறுவை சிகிச்சைகளுக்கும் — பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலம், ENT, பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் அறுவை சிகிச்சை, ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, முக-தாடை அறுவை சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை — எங்கள் மயக்க மருந்து குழு துணை நிற்கிறது: மயக்க மருந்துக்கு முந்தைய பரிசோதனை, அறுவையின்போது மயக்க மருந்து அளித்துக் கண்காணித்தல், அறுவைக்குப் பின் வலி நிவாரணம்.
எங்கள் ஆபரேஷன் தியேட்டர்களில், நவீன மயக்க மருந்து இயந்திரங்களுடன், மல்டிபாராமீட்டர் மானிட்டர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்தபடி மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. இதே குழு பிரசவ வார்டில் வலியில்லா பிரசவத்துக்கு எபிட்யூரல் சிகிச்சையும் அளிக்கிறது.
எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்
- மயக்க மருந்துக்கு முந்தைய பரிசோதனை
- திறந்த மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து
- சிசேரியன், அவசர மகப்பேறு சிகிச்சைகள், மகளிர் நல அறுவை சிகிச்சைகளுக்கு மயக்க மருந்து
- வலியில்லா பிரசவத்துக்கு எபிட்யூரல்
- எலும்பு அறுவை சிகிச்சைகள், அன்றே வீடு திரும்பும் (day-care) சிகிச்சைகளுக்கு மயக்க மருந்து
- அறுவைக்குப் பிந்தைய வலி நிவாரணம்
- உயிர்காக்கும் சிகிச்சை — BLS மற்றும் ACLS (அடிப்படை, மேம்பட்ட இதய உயிர்காப்பு)
வசதிகளும் கருவிகளும்
- நவீன மயக்க மருந்து இயந்திரங்கள் (workstations)
- மல்டிபாராமீட்டர் மானிட்டர்கள்
- இன்வேசிவ் கண்காணிப்பு (ரத்தக்குழாய் வழி அளவீடு)
- இன்ஃப்யூஷன், சிரிஞ்ச் பம்புகள்
- டீஃபிபிரிலேட்டர் (இதயத்துக்கு மின் அதிர்வு கொடுக்கும் கருவி)
- நன்கு அமைந்த பெரிய ஆபரேஷன் தியேட்டர்
- சிறிய மற்றும் சீழ்/தொற்று அறுவை சிகிச்சைகளுக்கான தனி தியேட்டர்
எங்கள் மயக்க மருந்து நிபுணர் குழுவிடம் பேசுங்கள்
உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ TMH-இல் அறுவை சிகிச்சை அல்லது பிரசவம் திட்டமிடப்பட்டிருந்தால், எங்கள் மயக்க மருந்து நிபுணர் குழு முன்பே உடல் தகுதியைப் பரிசோதித்து, சிகிச்சையின்போதும் குணமடையும் வரையிலும் உங்களுடன் இருக்கும்.
பிற சிறப்புப் பிரிவுகள்
அனைத்தையும் பாருங்கள்- அவசர மற்றும் விபத்து சிகிச்சை

- தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)

- பொது மருத்துவம்

- பொது அறுவை சிகிச்சை

- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்

- குழந்தை மருத்துவம்

- குழந்தை அறுவை சிகிச்சை

- எலும்பியல்

- இருதயவியல் (கார்டியாலஜி)

- சிறுநீரகவியல்

- சிறுநீரகப் பாதை மருத்துவம் (யூராலஜி)

- தோல் மருத்துவம்

- காது, மூக்கு, தொண்டை (ENT)

- கண் மருத்துவம்

- பல் மருத்துவம்

- பிசியோதெரபி

- கதிரியக்கவியல்
