முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பொது அறுவை சிகிச்சை at Thirumalai Mission Hospital

பொது அறுவை சிகிச்சை பற்றி

எங்கள் பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைத் துறை, வழக்கமான திறந்த அறுவை சிகிச்சையையும், நவீன சிறு துளை முறைகளையும் பயன்படுத்தி முழுமையான அறுவை சிகிச்சை அளிக்கிறது. பொருத்தமான இடங்களில் லேப்ராஸ்கோபிக் முறை பயன்படுத்தப்படுகிறது — சிறிய கீறல், அறுவைக்குப் பின் குறைந்த வலி, விரைவில் குணமடைதல்.

கிராமப்புற ஏழைகளுக்கும் எட்டும் அறுவை சிகிச்சை

நீண்டநாள் பிரச்சினைகளைத் தீர்த்து வாழ்க்கைத் தரத்தை மீட்க, கிராமப்புற ஏழைகளுக்கு அறுவை சிகிச்சையின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், தரமான அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவமனை பெரும்பாலும் அவர்களுக்கு எட்டுவதில்லை.

இந்தக் குறையைப் போக்க, தேவையுள்ளோருக்கு அறுவை சிகிச்சைக் கட்டணத்தில் 100% வரை TMH உதவித்தொகை வழங்குகிறது. பாதுகாப்பான, கிருமியற்ற சூழலில் பலவகையான இரண்டாம் நிலை அறுவை சிகிச்சைகளைச் செய்ய, 12 அறுவை சிகிச்சை நிபுணர்கள் (முழுநேர மற்றும் வருகை தரும்) கொண்ட குழு இங்கு உள்ளது. 2024-ல் நவீன மாடுலர் ஆபரேஷன் தியேட்டர் சேர்க்கப்பட்டதால், இப்போது TMH-இல் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.

கடந்த நிதியாண்டில் 848 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன; அவற்றில் 144 அறுவை சிகிச்சைகள் ஏழை நோயாளிகளுக்குப் பல்வேறு அளவு உதவித்தொகையுடன் செய்யப்பட்டன.

பொது அறுவை சிகிச்சை

  • குடலிறக்கம் (ஹெர்னியா) அறுவை சிகிச்சை
  • குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) அறுவை சிகிச்சை
  • பித்தப்பை அறுவை சிகிச்சை
  • தைராய்டு அறுவை சிகிச்சை
  • மார்பகக் கட்டி மற்றும் மார்பக அறுவை சிகிச்சை
  • வெரிகோஸ் வெயின் (நரம்புச் சுருள்) சிகிச்சை
  • நீர்க்கட்டி, கொழுப்புக்கட்டி அகற்றுதல்
  • சீழ்க்கட்டியைக் கீறி சீழை வெளியேற்றுதல்
  • சிறு அறுவை சிகிச்சைகள்

லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை

  • லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை
  • லேப்ராஸ்கோபிக் குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) அகற்றுதல்
  • லேப்ராஸ்கோபிக் குடலிறக்கம் (ஹெர்னியா) சரிசெய்தல்
  • நோயைக் கண்டறியும் லேப்ராஸ்கோபி
  • பிற சிறு துளை அறுவை சிகிச்சைகள்

மூலம், ஆசனவாய் நோய்கள் (புரோக்டாலஜி)

இவற்றுக்கு முழுமையான சிகிச்சை:

  • மூலம் (பைல்ஸ்)
  • ஆசனவாய் வெடிப்பு (ஃபிஷர்)
  • பவுத்திரம் (ஃபிஸ்டுலா)
  • ஆசனவாயைச் சுற்றி சீழ்க்கட்டி
  • பைலோனிடல் சைனஸ் (முதுகின் அடியில் வரும் சீழ்க்குழி)

சர்க்கரை நோய் பாதப் புண் மற்றும் காயப் பராமரிப்பு

  • சர்க்கரை நோயால் வரும் பாதப் புண்ணுக்குச் சிகிச்சை
  • தொற்றுள்ள புண்களுக்குச் சிகிச்சை
  • அறுவை மூலம் அழுகிய திசுக்களை அகற்றுதல் (டிப்ரைட்மென்ட்)
  • சீழ்க்கட்டியைக் கீறி சீழை வெளியேற்றுதல்
  • நீண்டநாள் ஆறாத புண்களுக்குப் பராமரிப்பு

வசதிகளும் கருவிகளும்

  • நன்கு அமைந்த பெரிய ஆபரேஷன் தியேட்டர்
  • சிறிய மற்றும் சீழ்/தொற்று அறுவை சிகிச்சைகளுக்கான தனி தியேட்டர்
  • நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக் கருவி
  • நவீன மின் அறுவை (எலக்ட்ரோசர்ஜிக்கல்) கருவிகள்
  • திறந்த மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கான முழுமையான கருவிகள்
  • மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சையின்போது கண்காணிக்கும் வசதிகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை தேவைப்படுமா?

மருத்துவர் முதலில் உங்களைப் பரிசோதித்து, உங்கள் பரிசோதனை முடிவுகளைப் பார்ப்பார். சில பிரச்சினைகள் மருந்து, கட்டு (dressing), கண்காணிப்பு அல்லது சிறிய சிகிச்சைகள் மூலமே சரியாகும்; சிலவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மருத்துவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏன் பரிந்துரைத்துள்ளார்?

மருந்துகளால் பிரச்சனையை முழுமையாகக் குணப்படுத்த முடியாதபோது, அல்லது சிகிச்சையைத் தாமதப்படுத்துவதால் தொற்று, அடைப்பு, இரத்தப்போக்கு, கடுமையான வலி அல்லது நோய் மோசமடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சையில் வலி இருக்குமா?

அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதால் வலி தெரியாது. அதன்பிறகு சிறிது வலி இருக்கலாம்; ஆனால் வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்படும்.

பொது அறுவை சிகிச்சை திங்கள் முதல் சனி வரை, காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

தேவைப்படும்போது நிபுணத்துவ அறுவை சிகிச்சை

திறந்த அறுவை சிகிச்சை • லேப்ராஸ்கோபிக் (சாவித்துளை) அறுவை சிகிச்சை • பாதுகாப்பான அறுவை சிகிச்சை • விரைவில் குணமடைதல்

பிற சிறப்புப் பிரிவுகள்

அனைத்தையும் பாருங்கள்
இப்போதே அழையுங்கள்