முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பொது மருத்துவம் at Thirumalai Mission Hospital

பொது மருத்துவம் பற்றி

திருமலை மிஷன் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை, பெரியவர்களுக்கு OP மற்றும் உள்நோயாளி சிகிச்சையை முழுமையாக வழங்குகிறது; பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உயிருக்கு ஆபத்தில்லாத நோய்களுக்கும் 24 மணி நேர உடனடி சிகிச்சையும் உண்டு.

ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல், நோய்த் தடுப்பு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், நீண்டகால உடல்நலம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திடீர் நோய்கள் முதல் நீண்டகால நோய்கள் வரை பலவற்றையும் எங்கள் மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

CT ஸ்கேன், அல்ட்ராசவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்-ரே, DEXA ஸ்கேன் உள்ளிட்ட முழுமையான லேப், ஸ்கேன் வசதிகளின் துணையுடன், உரிய நேரத்தில் பரிசோதித்து, ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற சிகிச்சையை வழங்குகிறோம்.

எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்

  • OP மற்றும் உள்நோயாளி சிகிச்சை
  • பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு 24 மணி நேர உடனடி சிகிச்சை
  • உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகியவற்றுக்குச் சிகிச்சை
  • டைபாய்டு, மலேரியா, டெங்கு, ஸ்க்ரப் டைபஸ், காசநோய் (TB) போன்ற தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல்
  • ஆஸ்துமா, COPD போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்குப் பரிசோதனையும் சிகிச்சையும்
  • இதய ரத்தக்குழாய் அடைப்பு (கரோனரி) நோய் மற்றும் பிற நீண்டகால நோய்களுக்குச் சிகிச்சை
  • எலும்புத் தேய்மானம் (ஆஸ்டியோபோரோசிஸ்) பரிசோதனையும் சிகிச்சையும்
  • நோய் வருமுன் கண்டறியும் பரிசோதனைகள், வாழ்க்கைமுறை ஆலோசனை

பொது மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

இவற்றில் ஏதேனும் இருந்தால், பொது மருத்துவரைப் பார்ப்பது உதவும்:

  • குறையாமல் நீடிக்கும் அல்லது திரும்பத் திரும்ப வரும் காய்ச்சல், தொற்றுகள்
  • தொடர் இருமல், மூச்சுத் திணறல், மூச்சில் விசில் சத்தம் (வீசிங்)
  • காரணம் தெரியாத சோர்வு, பலவீனம், எடை கூடுதல்/குறைதல்
  • அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், காரணம் தெரியாத உடல் வலி
  • இரத்த அழுத்தம் அல்லது ரத்தச் சர்க்கரை அளவில் மாறுபாடு
  • அதிக கொலஸ்ட்ரால் அல்லது பரிசோதனையில் வேறு அசாதாரண முடிவுகள்
  • தொடர் வயிற்று அசௌகரியம், வாந்தி, மலம் கழிப்பதில் மாற்றம் போன்ற செரிமானப் பிரச்சினைகள்
  • பரிசோதனையும் ஒருங்கிணைந்த சிகிச்சையும் தேவைப்படும் பல உடல்நலப் பிரச்சினைகள்
  • சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, COPD போன்ற நீண்டகால நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்
  • நோய் வருமுன் பரிசோதனை அல்லது வாழ்க்கைமுறை ஆலோசனை தேவை

எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா?

பொது மருத்துவர் உங்கள் அறிகுறிகளைப் பரிசோதித்து, காரணங்களைக் கண்டறிந்து, தேவையான பரிசோதனைகளைப் பரிந்துரைத்து, தேவைப்பட்டால் சரியான சிறப்பு மருத்துவரிடம் அனுப்புவார்.

வசதிகளும் கருவிகளும்

  • முழுமையான லேப் வசதிகள்
  • CT ஸ்கேன்
  • அல்ட்ராசவுண்ட்
  • டிஜிட்டல் எக்ஸ்-ரே
  • எலும்பு வலிமையை அறிய DEXA ஸ்கேன்
  • சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பைக் கண்டறிய ஆப்தால்மோஸ்கோபி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

OP-க்கு வரும் முன் என் வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடலாமா?

மருத்துவர் நிறுத்தச் சொல்லாத வரை உங்கள் வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள் — நீங்கள் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்பதை மருத்துவரிடம் சொல்லுங்கள்.

OP-க்கு வரும் முன் சாப்பிடலாமா?

ஆம். வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லப்படாவிட்டால், OP-க்கு வரும்போது வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

என் மருந்துகளின் பெயர்களை நான் மறந்துவிட்டால் என்ன செய்வது?

உங்கள் பழைய மருந்துச் சீட்டுகளையோ மருந்து அட்டைகளையோ (strips) கொண்டு வாருங்கள் — நீங்கள் இப்போது என்ன சிகிச்சையில் இருக்கிறீர்கள் என்பதை மருத்துவர் சரியாகத் தெரிந்துகொள்ள இது உதவும்.

பொது மருத்துவம் திங்கள் முதல் சனி வரை

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்பான கவனிப்பு

திடீர் உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை வேண்டுமா, நீண்டகால நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமா, அல்லது உங்கள் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டுமா — உங்கள் தேவைக்கு ஏற்ற, அறிவியல் அடிப்படையிலான, அன்பான சிகிச்சையை எங்கள் பொது மருத்துவக் குழு வழங்குகிறது.

+91 88840-44444 என்ற எண்ணை அழையுங்கள்

பிற சிறப்புப் பிரிவுகள்

அனைத்தையும் பாருங்கள்
இப்போதே அழையுங்கள்