முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
எலும்பியல் at Thirumalai Mission Hospital

எலும்பியல் பற்றி

திருமலை மிஷன் மருத்துவமனையின் எலும்பியல் துறை, எலும்புகள், மூட்டுகள், முதுகுத்தண்டு, தசைகள், தசைநாண்கள், தசைநார்கள் ஆகியவற்றில் ஏற்படும் காயங்களுக்கும் நோய்களுக்கும் முழுமையான சிகிச்சை அளிக்கிறது. வலியைக் குறைக்கவும், இயக்கத்தை மீட்கவும், நோயாளிகள் தங்கள் அன்றாட வேலைகளுக்குத் திரும்பவும் உதவ, எங்கள் அனுபவம் வாய்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சையும் அறுவை இல்லாத சிகிச்சைகளும் அளிக்கின்றனர்.

எலும்பு முறிவு, விளையாட்டுக் காயங்கள் முதல் மூட்டு வாதம், மூட்டுத் தேய்மானம் வரை பல பிரச்சினைகளுக்கு, ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற சிகிச்சையைத் திட்டமிடுகிறோம்.

எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்

  • எலும்பு முறிவு மற்றும் விபத்துக் காயங்களுக்குச் சிகிச்சை
  • அறுவையின்றியும் (closed) அறுவை மூலமும் (open) எலும்பு முறிவைச் சரிசெய்தல்
  • எலும்பு ஒட்டுதலுடனோ இல்லாமலோ, உள்ளே பிளேட்/ஸ்க்ரூ பொருத்துதல் (internal fixation)
  • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (இடுப்பு, முழங்கால்)
  • ஆர்த்ரோஸ்கோபிக் (சாவித்துளை) அறுவை சிகிச்சை
  • கை அறுவை சிகிச்சை
  • தசைநாண் சீரமைப்பு, தசைநாண் இடமாற்று அறுவை சிகிச்சைகள்
  • விளையாட்டுக் காயங்களுக்குச் சிகிச்சையும் மறுவாழ்வும்
  • மூட்டு விலகல், சிக்கலான காயங்களுக்குச் சிகிச்சை
  • மூட்டுத் தேய்மானம் (ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்) உள்ளிட்ட மூட்டு நோய்களுக்குச் சிகிச்சை
  • மறுவாழ்வு, அறுவைக்குப் பிந்தைய தொடர் கவனிப்பு

வசதிகளும் கருவிகளும்

துல்லியமாகக் கண்டறிந்து சிறப்பாகச் சிகிச்சை அளிக்க, எங்கள் எலும்பியல் துறையில் நவீன ஆபரேஷன் தியேட்டர் வசதிகளும் ஸ்கேன் தொழில்நுட்பமும் உள்ளன:

  • C-ஆர்ம் இமேஜ் இன்டென்சிஃபையர் (அறுவையின்போது எக்ஸ்-ரே)
  • ஆர்த்ரோஸ்கோபி கருவிகள்
  • சிறப்பு இணைப்புகள் கொண்ட எலும்பு அறுவை சிகிச்சை ஆபரேஷன் தியேட்டர்
  • மாவுக்கட்டு மற்றும் அசையாமல் வைக்கும் வசதிகள்

நோயாளிகள் என்ன சொல்கிறார்கள்

எல்லாப் பணியாளர்களும் மிகவும் அன்பாக இருந்தார்கள்; என் அம்மா வந்ததிலிருந்தே அவருக்கு நிம்மதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். சிகிச்சை சீராக நடந்தது; அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்.
Sushmitha Ramu எலும்பியல் · Google மதிப்புரை · ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
Google-இல் மேலும் மதிப்புரைகளைப் படியுங்கள் (புதிய தாவலில் திறக்கும்)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு ஏன் எலும்பு அல்லது மூட்டு வலி ஏற்படுகிறது?

காயம், மூட்டு வாதம், தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு, தொற்று, தேய்மானம், வைட்டமின் குறைபாடு அல்லது நரம்புப் பிரச்சினைகள் காரணமாக எலும்பு அல்லது மூட்டு வலி வரலாம்.

ஒவ்வொரு எலும்பு முறிவுக்கும் அறுவை சிகிச்சை தேவையா?

இல்லை. சில எலும்பு முறிவுகள் மாவுக்கட்டு, ஸ்பிளின்ட், கைத்தொட்டில் (sling) அல்லது ஓய்வு மூலமே சரியாகும். எந்த எலும்பு, எந்த வகை முறிவு, எலும்பு விலகியுள்ளதா, வயது, அன்றாட வேலைகள் ஆகியவற்றைப் பொறுத்து சிலவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மாவுக்கட்டு (பிளாஸ்டர்) எவ்வளவு நாள் போட்டிருக்க வேண்டும்?

முறிவையும் அது எப்படிக் குணமாகிறது என்பதையும் பொறுத்தது — எந்த எலும்பு, நோயாளியின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து பொதுவாக 3 முதல் 8 வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.

எலும்பியல் திங்கள் முதல் சனி வரை, காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

மீண்டும் சிரமமின்றி நடமாடுங்கள்

காயம் அடைந்திருந்தாலும், நீண்டநாள் மூட்டு வலியால் அவதிப்பட்டாலும், சிறப்பு எலும்பு சிகிச்சை தேவைப்பட்டாலும் — நீங்கள் மீண்டும் நன்றாக நடமாடவும், வலி குறையவும், சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் எங்கள் குழு உதவும்.

பிற சிறப்புப் பிரிவுகள்

அனைத்தையும் பாருங்கள்
இப்போதே அழையுங்கள்