ஊட்டச்சத்து மற்றும் உணவியல் பற்றி
நல்ல ஊட்டச்சத்து என்பது நோயைத் தடுப்பதற்கும், சிகிச்சைக்குத் துணைபுரிவதற்கும், மற்றும் குணமடைவதை ஊக்குவிப்பதற்கும் ஒரு இன்றியமையாத பகுதியாகும். திருமலை மிஷன் மருத்துவமனையில், எங்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறை, அனைத்து வயது நோயாளிகளுக்கும் ஆதார அடிப்படையிலான ஊட்டச்சத்துப் பராமரிப்பை வழங்குகிறது. எங்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவ உணவுமுறை நிபுணர்கள், சிகிச்சை, குணமடைதல் மற்றும் நீண்டகால நல்வாழ்வுக்குத் துணைபுரியும் தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்துத் திட்டங்களை உருவாக்குவதற்காக, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். நீங்கள் ஒரு நாள்பட்ட மருத்துவ நிலையைக் கையாண்டாலும், அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்தாலும், அல்லது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க விரும்பினாலும், நடைமுறைக்கு உகந்த, நீடித்த ஊட்டச்சத்துப் பராமரிப்பின் மூலம் உங்கள் உடல்நல இலக்குகளை அடைய உங்களுக்கு உதவ நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எங்கள் சிகிச்சைகளும் சேவைகளும்
- ஊட்டச்சத்து மதிப்பீடு மற்றும் உணவுமுறை ஆலோசனை
- நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை
- எடை மேலாண்மை
- இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை
- தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான ஊட்டச்சத்து
- புற்றுநோய்க்கான ஊட்டச்சத்து ஆதரவு
- வாழ்க்கைமுறை மற்றும் தடுப்பு ஊட்டச்சத்து ஆலோசனை
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சைமுறை உணவுத் திட்டமிடல்
- குடல்வழி மற்றும் சிரைவழி ஊட்டச்சத்து உட்பட, தீவிர நோயுற்ற நோயாளிகளுக்கான மருத்துவ ஊட்டச்சத்து ஆதரவு
எங்கள் அணுகுமுறை
சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான உணவு இடம்பெற, எங்கள் உணவியல் நிபுணர்கள் மருத்துவர்களுடனும் பிற நிபுணர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறார்கள். நம் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற, நடைமுறையான உணவு ஆலோசனைகளை வழங்கி, நல்ல உடல்நலத்துக்கும் விரைவில் குணமடையவும் உதவும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க நோயாளிகளுக்கும் குடும்பத்தினருக்கும் கற்றுத்தருகிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உடல் எடையைக் குறைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
குறிப்பிட்ட நாள் கணக்கு எதுவும் இல்லை. தொடக்க எடை, உணவு, உடல் உழைப்பு, தூக்கம், உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து, ஆரோக்கியமான முறையில் மாதத்துக்குச் சுமார் 2-3 கிலோ எடை குறையும். வேகமாக எடையைக் குறைப்பதைவிட, தொடர்ந்து வாழ்க்கைமுறையை மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.
PCOD ஏன் ஏற்படுகிறது?
ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் செயல்பாட்டுக் குறைபாடு (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்), பரம்பரை, மன அழுத்தம், தூக்கப் பிரச்சினைகள், வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு PCOD தொடர்புடையதாக இருக்கலாம். ஏதோ ஒரு உணவாலோ ஒரே ஒரு காரணத்தாலோ இது வருவதில்லை. சரியான உணவு, உடற்பயிற்சி, தேவைப்பட்டால் எடைக் குறைப்பு, மருத்துவ ஆலோசனை ஆகியவை இதைக் கட்டுப்படுத்த உதவும்.
என்னால் சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில், குற்ற உணர்ச்சி வேண்டாம். தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் பலருக்கும் வருவதுதான்; பெரும்பாலும் சரிசெய்ய முடியும். குழந்தை சரியாக மார்பைக் கவ்வுகிறதா, பால் கொடுக்கும் நிலை சரியா என்று பாருங்கள்; அடிக்கடி பால் கொடுங்கள்; தாய்ப்பால் ஆலோசகர், குழந்தை நல மருத்துவர் அல்லது மகளிர் நல மருத்துவரின் உதவியை நாடுங்கள். குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கவில்லை என்றால், உடனே மருத்துவரைப் பாருங்கள்.
என் குழந்தையின் எடை கூடவில்லை. நான் என்ன செய்வது?
குழந்தையின் எடையை அதன் வயது, பிறப்பு எடை, வளர்ச்சி அட்டவணை, பால் குடிக்கும் விதம், பொதுவான உடல்நலம் ஆகியவற்றை வைத்தே மதிப்பிட வேண்டும். குழந்தை போதுமான அளவு பால் குடிக்கிறதா, போதுமான அளவு சிறுநீர் கழிக்கிறதா (ஈரமான டயப்பர்கள்) என்று பாருங்கள். குழந்தை நல மருத்துவரைக் கேட்காமல் கூடுதல் உணவுகளைத் தொடங்கவோ, உணவுமுறையை மாற்றவோ வேண்டாம். குழந்தை சோர்வாக இருந்தாலோ, சரியாகப் பால் குடிக்காவிட்டாலோ, அடிக்கடி வாந்தி எடுத்தாலோ, எடை குறைந்தாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.
ஒவ்வொரு நாளும் நல்ல உணவு, நல்ல உடல்நலம்
ஒரு நோய்க்கான சிறப்பு உணவுமுறை வேண்டுமா, அல்லது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழிகாட்டல் வேண்டுமா — உங்களுக்கு ஏற்ற உணவு ஆலோசனையை அன்புடன் வழங்க எங்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் குழு தயாராக உள்ளது.
பிற சிறப்புப் பிரிவுகள்
அனைத்தையும் பாருங்கள்- அவசர மற்றும் விபத்து சிகிச்சை

- தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)

- பொது மருத்துவம்

- பொது அறுவை சிகிச்சை

- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்

- குழந்தை மருத்துவம்

- குழந்தை அறுவை சிகிச்சை

- எலும்பியல்

- இருதயவியல் (கார்டியாலஜி)

- சிறுநீரகவியல்

- சிறுநீரகப் பாதை மருத்துவம் (யூராலஜி)

- தோல் மருத்துவம்

- காது, மூக்கு, தொண்டை (ENT)

- கண் மருத்துவம்

- பல் மருத்துவம்

- மயக்கவியல்

- பிசியோதெரபி

- கதிரியக்கவியல்
